தேனியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி, ஆக. 2: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலியை 600 ஆகவும் உயர்த்த வேண்டும், 55 வயதானவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், வீடில்லாத அனைவருக்கும் வீடும், அரசு புறம்போக்கு நிலத்தில் வசிபவர்களுக்கு பட்டாவும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: