×

மூணாறு முதல் மறையூர் வரை சாலை சீரமைப்புக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு தேவிகுளம் எம்.எல்.ஏ தகவல்


மூணாறு, ஆக. 2: தினகரன் செய்தி எதிரொலியாக மூணாறு முதல் மறையூர் வரை சாலை சீரமைப்பு பணிக்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, தேவிகுளம் எம்.எல்.ஏ அட்வகேட் ஏ.ராஜா தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 2020ல் மழை வெள்ளத்தின்போது, மூணாறு முதல் மறையூர் வரை பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் சாலையின் ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்தது. மேலும், கன்னிமலை மற்றும் பெரியவாரை அருகே, சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், வாகன போக்குவரத்திற்கு பாதிக்கப்பட்டது. இப்பகுதிகளில் ஏராளமான விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன. ஆபத்தான இந்த சாலையில் தற்போது ஒரு வாகனம் மட்டுமே கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த சாலையின் ஒரு பகுதியை சீரமைக்க கோரி நமது தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக, மூணாறில் இருந்து மறையூர் செல்லும் இருமாநில நெடுஞ்சாலையை சீரமைக்கவும், மண்சரிவு மூலம் இடிந்து விழுந்த சாலையின் பகுதிகளை சீரமைக்கவும் ரூ.6 கோடி நிதி அனுமத்தித்துள்ளதாக தேவிகுளம் எம்.எல்.ஏ அட்வகேட் ஏ.ராஜா தெரிவித்தார். முதற்கட்டமாக பெரியவாரை பாலம் மற்றும் கன்னிமலை பாலம் அருகே உள்ள ஆபத்தான வளைவுகளை சீரமைக்கும் பணிகள் தொடங்க பட்டுள்ளன. மழை காலத்திற்கு பின் சாலையின் பிறபகுதிகளின் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Devikulam MLA ,Munnar ,Kaiyur ,
× RELATED மூணாறு அருகே கள்ளச்சாராய ஊறல் அழிப்பு