ஹஜ் கமிட்டி சார்பில் தமிழக முதல்வருக்கு நன்றி

தொண்டி, ஆக.2:  ஹஜ் பயணத்திற்கு முழு முயற்சி செய்த தமிழக முதல்வருக்கு ஹஜ் கமிட்டி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த ஹஜ் பயணிகள் 1672 பேர் ஹஜ் யாத்திரையை முடித்து வந்து சேர்ந்துள்ளனர். ஹஜ் பயணம் மேற்கொள்ள உதவிய தமிழக முதல்வருக்கு நன்றி கூறி ஹஜ் கமிட்டி உறுப்பினர் குணங்குடி அனிபா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வழியாக  இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்ட  அனைத்து ஹஜ் பயணிகளும் பாதுகாப்பாக கொச்சி விமான நிலையம் வழியாக வந்து சேர்ந்தார்கள். அதற்கான அனைத்து பணிகளும் செய்த தமிழக முதல்வர் மற்றும்  அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஹஜ் கமிட்டி உறுப்பினர்கள், ஹஜ் கமிட்டி அரசு அதிகாரிகள், தமிழகம், கேரளா ஹஜ் கமிட்டி சொசைட்டியின் ஒட்டுமொத்த நிர்வாகிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் ஆண்டுகளில் தமிழக ஹஜ் பயணிகள் சென்னை விமானம் நிலையத்தில் இருந்து ஜித்தா வழியாக  செல்வதற்கு அனுமதி அளித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: