நிலக்கோட்டை பேரூராட்சியில் சுகாதார சபை ஆலோசனை கூட்டம்

நிலக்கோட்டை, ஆக 2:நிலக்கோட்டை  பேரூராட்சியில் வட்டார அரசு மருத்துவ அலுவலர்கள் சார்பில் சுகாதார சபை  ஆலோசனை  கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன்  தலைமை வகிக்க, துணை தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர்  சுந்தரி வரவேற்றார். வட்டார அரசு மருத்துவ அலுவலர் அரவிந்தன் கலந்து கொண்டு  மழைக்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் தொடர்பான ஆலோசனைகளை  வழங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர் நாகேந்திரன், திமுக பேரூர் செயலாளர்  ஜோசப்கோவில்பிள்ளை, நிர்வாகிகள் குட்டி, மணிராஜா மற்றும் சுகாதார- மருத்துவ  பணியாளர்கள், செவிலியர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்டனர்.  சுகாதார ஆய்வாளர் சடகோபி நன்றி கூறினார்.

Related Stories: