கொடைக்கானல், ஆக. 2: கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலய 156வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வில் கொட்டும் மழையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கொடைக்கானல் புனித சலேத் அன்னை ஆலய 156வது ஆண்டு திருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. முன்னதாக சலேத் அன்னை திருஉருவம் பொறித்த கொடி கொடைக்கானல் மூஞ்சிக்கல் திருஇருதய ஆலய வளாகத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலம் சலேத் அன்னை ஆலயத்தை வந்தடைந்த பின் அங்கு கொடியேற்ற சிறப்பு திருப்பலி கொடைக்கானல் வட்டார அதிபரும், பங்குத்தந்தையுமான ஜான் திரவியம் தலைமையில் நடந்தது. மதுரை தெற்கு வட்டார அதிபர் அருட்தந்தை ஆனந்தம் சிறப்பு மறையுரையாற்றினார்.
இதன்பின் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் 5 ஆயிரத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நாளும் மாலை 5.30 மணிக்கு சலேத் அன்னை ஆலயத்தில் நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. நேற்று செண்பகனூர் பங்குத்தந்தை அப்போலின் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இன்று பாக்கியபுரம் பங்குத்தந்தை அமல்ராஜ், 3ம் தேதி உகந்தே நகர் பங்குத்தந்தை பீட்டர் சகாயராஜா, 4ம் தேதி லூர்துபுரம் பங்குத்தந்தை அந்தோணி துரைராஜ், 5, 6ம் தேதிகள் அருட்தந்தை குமார்,
7ம் தேதி இயேசு சபை குழு, 8ம் தேதி மதுரை கிறிஸ்தவ வாழ்வுரிமை பணிக்குழு அருள்தந்தை தாமஸ் வெனிஸ், 9ம் தேதி மங்களக்கொம்பு பங்குத்தந்தை ஆரோக்கியராஜ், பெருமாள்மலை பங்குத்தந்தை சபாஸ்டின் சின்னத்துரை, 10ம் தேதி மேலூர் பங்குத்தந்தை அந்தோணி பாக்கியம், 11ம் தேதி மதுரை பாக்கியநாதபுரம் பங்குத்தந்தை வினோத் மதியாஸ், 12, 13ம் தேதிகள் மதுரை குரு மட அருட்தந்தை அந்தோணிராஜன் ஆகியோரது தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. 14, 15ம் தேதி அன்னையின் சப்பர பவனி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார அதிபர் ஜான் திரவியம் தலைமையில் பங்கு பேரவையினர், விழா குழுவினர், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.