நீடாமங்கலம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேரவை கூட்டம்

நீடாமங்கலம்,ஆக.2: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் தென்கரவாயலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை பேரவை கூட்டம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் ஜான்கென்னடி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பூசாந்திரம் விவசாய தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் தமிழ்மணி. திலீபன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தென்கரவாயல் புதுரோடு, தார் சாலையாக அமைக்க வேண்டும். தென்கரவயல் பள்ளி அருகில் வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி வரும் 10ம் தேதி சாலை மறியல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: