கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயிலில் ஆடிப்பூர ஏகதின மகோற்சவ விழா

திருவிடைமருதூர், ஆக.2: திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் ஆடிப்பூர விழா ஏகதின மகோற்சவ விழா நடைபெற்றது. நவக்கிரக கேயில்களில் சுக்கிரன் தலமாக மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி போற்றப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று ஏகதின மகோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வர சுவாமி மற்றும் சபரிவார சன்னதிகளில் நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் அம்பாள் ஆடிப்பூர அம்மன் கொலு மண்டபம் எழுந்தருளினார். அம்பாளுடன் விநாயகர், அஸ்திரதேவர் மூர்த்திகளும் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, புண்யாகவாகனம், கலச பூஜை, சிறப்பு ஹோமம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகத்தினர், உபயதாரர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதேபோல, திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் நேற்று ஆடிப்பூர திருவிழா ஏகதின மகோற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி மூலவர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் உற்சவர் அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு எழுந்தருளினார். காவிரி கரையில் தீர்த்தவாரி வைபோகம் நடைபெற்து. அங்கு அஸ்திர தேவர் மூர்த்தி பால், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற சகல வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தமருளினர்.

Related Stories: