வல்லம் அரசு மருத்துவமனையில் 7 தாய்மார்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

cவல்லம், ஆக.2: வல்லம் அரசு மருத்துவமனையில் 7 தாய்மார்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தஞ்சாவூர் அருகே வல்லம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒவ்வொரு மாதமும் குடும்பநல அறுவை சிகிச்சைகள் நவீன நுண் துளை கருத்தடை அறுவைசிகிச்சை மூலம் செய்யப்பட்டு அறுவை அரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த மாதம் வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவீன லேப்பராஸ்கோப்பி முறையில் 7 தாய்மார்களுக்கு நுண் துளை கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு நலமுடன் வீடு திரும்பினர். தஞ்சாவூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் நமசிவாயம் உத்தரவின்படி, குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் சிவகுமார் வழிகாட்டுதலில் வல்லம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு.அகிலன் தலைமையில் முகாம் நடைபெற்றது.

மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் திவ்யா, மயக்கவியல் நிபுணர் டாக்டர் ஆனந்த், பொறுப்பு செவிலியர்கள் ரஹ்மத் பேகம், ரேணுகா, கிரேசி மேரி கல்பனா, சரோஜா, மருந்தாளுனர் னிவாசன், வட்டார சுகாதார புள்ளியியலார் சுமதி, மருத்துவ பணியாளர்கள் முருகேசன், பவித்ரன், ஆரஞ்சு, சபீனா, கீதா, வினோத் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு இந்த சிறப்பு நவீன லேப்பராஸ்கோபிக் கருத்தடை அறுவை சிகிச்சை முகாமை நடத்தினர்.

இத்தகவலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அகிலன் தெரிவித்தார்.

Related Stories: