ஆலங்குடி அருகே அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலில் மது எடுப்பு

ஆலங்குடி, ஆக. 2: ஆலங்குடி அருகே அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கோவிலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கோட்டை கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மது எடுத்து தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.

இது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

Related Stories: