காரைக்கால் அருகே சிவலோகநாதர் சுவாமி கோயிலில் ஆடிப்பூர விழா

காரைக்கால், ஆக.2: காரைக்கால் அடுத்த தல தெருவில் பிரசித்தி பெற்ற சிவலோகநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதங்களில் வரும் ஆடிப்பூரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் சிவகாமி அம்மனுக்கு சந்தனம், பால், பன்னீர் திரவியங்களின் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் சிவகாமி அம்மாளுக்கு புதிய வெள்ளி அங்கி சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் உற்சவர் சிவகாமி அம்மனுக்கு பக்தர்கள் தங்கள் வேண்டிய வரம் கிடைக்க வளையல் அணிவித்தனர். சிறப்பு வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பூராத்தை முன்னிட்டு சிவலோகநாதர் கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: