×

நாகூர் தர்கா பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நாகப்பட்டினம், ஆக.2: போக்குவரத்து மற்றும் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த புகழ்பெற்ற நாகூர் தர்காவின் ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.
புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் தர்கா அலங்கார வாசல், கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், தர்கா வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் நாகூர் தர்காவின் புகாரை அடுத்து அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாமாக முன்வந்து அகற்றி கொள்ள நாகப்பட்டினம் நகராட்சி நிர்வாகம் கால அவகாசம் கொடுத்தது. ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில் நேற்று நாகூர் தர்கா பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. அலங்கார வாசல், சிங்கப்பூர் வீதி, பெரிய கடைத்தெரு, உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியின்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. அடிக்கடைகள், தள்ளுவண்டி கடைகள், பிரியாணி கடைகள் என அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது.

Tags : Nagor Dargah ,
× RELATED ஆளுநர் வருகை புரிவதைக் கண்டித்து இந்தியா கூட்டணி போராட்டம்..!!