×

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பணியை 100% செயல்படுத்திட வாக்காளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்: நாகை கலெக்டர் அறிவுறுத்தல்

நாகப்பட்டினம், ஆக. 2: நாகப்பட்டினம் மாவட்டத்தில் வாக்காளர்களிடமிருந்து தன்விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண் சேகரித்து- வாக்காளர் பட்டியலுடன் இணைத்தல் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் விபரங்களை இணைப்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இயற்றியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்களது ஆதார் எண் விபரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. இந்த பணியானது நேற்று (1ம் தேதி) தொடங்கி 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆதார் எண் பெறுவதன் நோக்கம் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்க வேண்டும் என்பது ஆகும். வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிபடுத்துவது மற்றும் பாதுகாத்தல் ஆகும்.
ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெற்றிருப்பது அல்லது ஒரு வாக்காளரின் விபரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுவது தவிர்க்கப்படும். வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண் விபரங்களை பெறுதல் என்பது முழுவதும் வாக்காளர்களின் தன்விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறுகிறது. வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் ழிஏளுறிஇ ஏர்யு போன்ற செயலிகள் மூலம் அல்லது இணையவழியாகவும் இணைக்கலாம். வாக்காளர்கள் படிவம் 6 டீ-யினை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் அல்லது தாசில்தார் அலுவலகம் ஆகியவற்றில் அளித்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ளலாம்.
தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை தொய்வு இல்லாமல் 100 சதவீதம் செயல்படுத்திட வாக்காளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். இதற்காக மாதம் இரண்டு முறை சிறப்பு முகாம் நடைபெறும். இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். டிஆர்ஓ ஷகிலா, ஆர்டிஓக்கள் முருகேசன் (நாகப்பட்டினம்), ஜெயராஜபௌலின் (வேதாரண்யம்), தனிவட்டாச்சியர் (தேர்தல்) பிரான்சிஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nagai ,
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு