இனுங்கூர், கணேசபுரம், நெய்தலூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேர் கைது

குளித்தலை, ஆக.2: இனுங்கூர், கணேசபுரம், நெய்தலூர் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அப்பகுதிகளுக்கு சென்று குளித்தலை போலீசார் நெய்தலூர் காலனி மதுபானகடை அருகே சட்ட விரோதமாக மதுவிற்ற பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த திருவனந்தம் (41), நெய்தலூர் ஆற்றுப்பாலம் அருகே மதுவிற்ற அதே பகுதியைச் சேர்ந்த நல்லேந்திரன் (38), இனுங்கூர் காசா காலனியில் பெட்டிக்கடையில் மதுவிற்ற அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (63) மற்றும் கணேசபுரம் பகுதியில் வீட்டில் மது விற்ற பாப்பாத்தி (60) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: