பாண்டேஸ்வரம் ஊராட்சியில் பழுதடைந்த நூலக கட்டிடம்: சீரமைக்க கோரிக்கை

ஆவடி, ஜூலை 30: பாண்டேஸ்வரம் ஊராட்சியில் பழுதடைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆவடி அடுத்து உள்ள பாண்டேஸ்வரம் பகுதியில் 2016 2017ல் கட்டிய கட்டிடத்தில் நூலகம் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நூலகத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் உள்ளனர். நூலகக் கட்டிடம் சிதைந்து இடியும் நிலையில் உள்ளது. அச்சம் காரணமாக வாசகர்கள் வருகை குறைந்துவிட்டது. பாண்டேஸ்வரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்கள் அதிகமாக காலியிடங்களாக உள்ளன.

அந்த இடங்களில் புதிய கட்டிடங்களை கட்டி நூலகம், ரேஷன்கடை ஆகியவற்றை செயல்படுத்தலாம். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கட்டிட வசதி இல்லாததால் நூலகத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் நூலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. நூலகத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: