×

அனுமதியில்லாமல் இயங்கும் சிமெண்ட் குடோனுக்கு சீல் வைக்க வேண்டும்: சிவகாசி யூனியன் கூட்டத்தில் வலியுறுத்தல்

சிவகாசி, ஜூலை 30: சிவகாசி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முத்துலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. துணைத்தலைவர் விவேகன்ராஜ், பிடிஓக்கள் சீனிவாசன், ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து
கொண்டனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: ஜெகத்சிங்பிரபு: ஆணையூர் ஊராட்சி கட்டளைபட்டி ரோடு குடியிருப்பு பகுதியில், தனியாருக்கு சொந்தமான சிமெண்ட் குடோன் அனுமதியின்றி இயங்கி வருகிறது. கன்டெய்னர் லாரிகளில் சிமெண்ட் லோடு ஏற்றி, இறக்குவதால் அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு பகுதியில் சிமெண்ட் குடோன் இயங்க அனுமதிக்ககூடாது.

பிடிஓ ராமமூர்த்தி: இது குறித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்ட குடோன் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சண்முகத்தாய்: ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் தமிழக முதல்வர் படம் வைக்க வேண்டும். செங்கமலநாச்சியார்புரத்தில் பயணிகள் நிழற்குடை மற்றும் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும். சாரதா நகரில் தெருவிளக்குகள், குளியல் தொட்டி அமைத்து கொடுக்க வேண்டும். துணைத்தலைவர் விவேகன்ராஜ்: செங்கமலநாச்சியார்புரத்தில் பொது கட்டிடங்கள் கட்ட இடவசதி இல்லை.

மாரிமுத்து: ஜமீன்சல்வார்பட்டியில் 3 சின்டெக்ஸ் தொட்டிகள் பழுதாகி உள்ளது. விரைவில் சீரமைக்க வேண்டும். செங்கமலபட்டியில் ரேஷன் கடை கட்டிடம் பழுதடைந்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் கட்டிடத்தில் இறங்குகிறது. தலைவர் முத்துலட்சுமி: கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரீசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய வளர்ச்சி குறித்து 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Sivakasi ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...