கஞ்சா கடத்திய இருவர் கைது

மூணாறு, ஜூலை 30: கேரள மாநிலம், மூணாறை அடுத்த அம்பலச்சாலில் அடிமாலி போதைப்பொருள் தடுப்பு பிரிவு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷைபு தலைமையிலான போலீசார் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே டூவீலரில் வந்த, மூணாறு செவன்மலை எஸ்டேட், நியூ மூணார் டிவிஷனை சேர்ந்த சேதுராஜ்(24) மாட்டுப்பெட்டி எஸ்டேட், கிரஹாம்ஸ் லேண்ட் நியூ டிவிஷனைச் சேர்ந்த சதாம் ஹூஸைன் (23) ஆகிய இருவரையும் சோதனை செய்தனர். அவர்களிடம் 2.072 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து, தேவிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: