திருப்புத்தூரில் மாலைநேர உழவர் சந்தை திறப்பு: விவசாயிகள் அமோக வரவேற்பு

திருப்புத்தூர், ஜூலை 30: மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிங்கம்புணரி ஐந்து இடங்களில் உழவர் சந்தை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நேரடியாக பயன் பெறுவதற்காக மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட பொன்னான திட்டம் உழவர் சந்தை. இந்த உழவர் சந்தைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட்டு வருகின்றன.

உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் சரக்கு கட்டணம் ஏதுயும் இன்றி உழவர் சந்தைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மூலம் தங்களது விளை நிலங்களிலிருந்து விளை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி உள்ளூர் சில்லறை விலையை விட 15 சதவீதம் குறைவாகவும், மொத்த மார்க்கெட் விலையை விட 20 சதவீதம் அதிகமாகவும் விற்று பயனடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்கும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நிதிநிலை அறிவிப்பில் தெரிவித்தார். இதை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் மாலைநேர திருப்புத்தூரில் திறக்க முடிவு

Related Stories: