ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கமுதி, ஜூலை 30:  கமுதியில் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கமுதி பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்துவிஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரிசி, கோதுமை மற்றும் உணவுப் பொருள் மீது மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முதுகுளத்தூர் தாலுகா குழு  முருகன் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் பொன்னுச்சாமி முனியசாமி, கருப்பையா, கண்ணதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: