×

கமுதி அருகே கருங்குளம் சக்தி மாரியம்மன் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

கமுதி, ஜூலை 30:  கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவில் 22ம் ஆண்டு ஆடி பொங்கல்  திருவிழா காப்புக்கட்டி,  கொடியேற்றத்துடன் விழா  துவங்கியது. இதனை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றது.
வரும் 4ம் தேதி 1008 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. பின்னர் 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் அன்று மாலை அம்மனுக்கு பக்தர்கள் அக்கினிசட்டி, சேத்தாண்டி வேடம், ஆயிரம்கண் பானை, கரும்பாலை தொட்டில் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

6ம் தேதி காலை பால்குடம் ஊர்வலத்துடன் அம்மனுக்கு பாலாபிஷேகமும் மாலை கரகாட்டம், முளைப்பாரி, வாணவேடிக்கை, மேள தாளங்களுடன் கிராமம் முழுவதும் வலம் வந்து குண்டாற்றில் முளைப்பாரியை கரைத்தலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. நாள்தோறும் இரவு கலை நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் கமுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Karunkulam Sakthi Mariamman festival ,Kamudi ,
× RELATED கமுதி பேரூராட்சியில் புதுப்பொலிவு பெறும் சிறுவர் பூங்கா