மதுரை பைபாஸில் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருட்டு

மதுரை, ஜூலை 30: மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்தவர் மனோ. இவர் தனது காரில் குடும்பத்துடன் பைபாஸ் ரோடு பகுதியில் உள்ள பீட்சா கடைக்கு சாப்பிடுவதற்காக வந்தார். இவர் தனது காரை ஷோரூம் முன்பு இரவு 8 மணிக்கு நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடையில் உணவருந்தினார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது, காரின் வலது பக்க பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே லேடீஸ் ஹேன்ட்பேக்கில் இருந்த பணம் ரூ.4,500 மற்றும் 2 விலையுயர்ந்த செல்போன்கள், வீட்டின் சாவி உள்ளிட்டவை திருடு போயிருந்தது.

இதுகுறித்து மனோ புகாரில் எஸ்எஸ்.காலனி போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போது வாலிபர் ஒருவர் முகமூடி அணிந்து கண்ணாடியை உடைத்து திருடி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Related Stories: