கருங்காலக்குடி அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

மேலூர், ஜூலை 30: மேலூர் அருகே கருங்காலக்குடி கருங்காலக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டின்படி, மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகிக்க, உதவி தலைமை ஆசிரியர் கல்யாண முத்தையா வரவேற்றார்.கூட்டத்தில் மாணவர்களுக்கு போதை வஸ்துகளின் தீமைகள் குறித்து விளக்கி கூறியதுடன், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய கூடாது என வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அப்போது வணிகர் சங்க தலைவர் ஜீவானந்தம், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் என உறுதியளித்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள், கொட்டாம்பட்டி எஸ்ஐ கண்ணன், தனியார் பள்ளி தாளாளர் சதக்கத்துல்லா, விஏஓ தீபன் சக்ரவர்த்தி பொறியாளர் பக்ருதீன் அலிஅகமத், சிராஜ்தீன், சர்க்கரை முகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: