×

2ம் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பட்டிவீரன்பட்டி,  ஜூலை 30:  2ம் ஆடி வெள்ளியை முன்னிட்டு, பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோயிலில் ஆடிமாத 2&ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு யாகவேள்வி பூஜைகளும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. பெண்கள் வளையல், தாம்பூலம் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து சுயம்பு நாகேஸ்வரியம்மனுக்கு வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் பத்திரகாளியம்மன் கோயில், காளியம்மன்-பகதியம்மன் கோயில், அய்யம்பாளையம் சின்ன முத்தாலம்மன், பெரிய முத்தாலம்மன் கோயில், சித்தரேவு முத்தாலம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் 2ம் ஆடிவெள்ளி களைகட்டியது. மேலும் இப்பகுதியில் உள்ள கோவியில் வளாகத்தில் கூல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags : Amman ,Villi ,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...