காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை, ஜூலை 30: குஜிலியம்பாறையில் வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் தர்மர் தலைமை  வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சோமுராஜ், மேற்கு மாவட்ட வட்டார தலைவர்  கோபால்சாமி முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தலைவர்  சதீஸ்குமார் கலந்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதில், இந்திய  தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மீது, நேஷனல் ஹெரால்டு பொய்  வழக்கு போட்டு, பழிவாங்கும் நோக்கில் செயல்படும் ஒன்றிய அரசிற்கு  எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: