ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பேரூராட்சிகளின் திமுக நிர்வாகிகள் அறிவிப்பு

சின்னாளபட்டி, ஜூலை 30: ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை, அய்யம்பாளையம், கன்னிவாடி, ராமபுரம், தாடிக்கொம்பு, அகரம் உட்பட 7 பேரூராட்சிகளின் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் சின்னாளபட்டி பேரூர் கழக அவைத்தலைவராக பாலகிருஷ்ணன், செயலாளராக அ.மோகன் ராஜூ, துணைச் செயலாளர்களாக ஜெயக்கிருஷ்ணன், அ.வேல்முருகன் (ஆதிதிராவிடர்) மகளிர் துணைச் செயலாளராக பா.விஜயலட்சுமி, பொருளாளராக எஸ்.ஆர்.முருகன், மாவட்ட பிரதிநிதிகளாக வெ.முருகன், த.ரவியும், ஒன்றிய பிரதிநிதிகளாக மு.தங்கப்பாண்டி, ராஜா, தம்பிதுரை, ரமேஷ், சந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அய்யம்பாளையம்  பேரூராட்சி அய்யம்பாளையம் பேரூர் அவைத்தலைவராக ஆ.சின்னமாயாண்டி, செயலாளராக ர.தங்கராஜ், துணைச் செயலாளராக வெங்கடேசன், சு.முத்துராஜ் (ஆதிதிராவிடர்) மகளிர் துணைச் செயலாளராக கலைவாணி, பொருளாளராக தங்கபெருமாள், மாவட்ட பிரதிநிதிகளாக சௌந்திரபாண்டி. சந்தானம், ஒன்றிய பிரதிநிதிகளாக அய்யங்காளை, பாண்டி, அண்ணாதுரை, முகமதுசாதிக், கார்த்திகேயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சித்தையன்கோட்டை பேரூராட்சி சித்தையன்கோட்டை பேரூர் கழக அவைத்தலைவராக முருகன், செயலாளராக சக்திவேல், துணைச் செயலாளராக அலாவுதீன், ஜெயராஜ் (ஆதிதிராவிடர்) மகளிர் துணைச் செயலாளராக பிரியங்கா, பொருளாளராக ஜெயராமன், மாவட்ட பிரதிநிதிகளாக ராஜகோபால், சௌந்திரபாண்டியன், ஒன்றிய பிரதிநிதிகளாக சங்கர், கார்த்திகேயன், சதாம் உசேன், மயில்வாகனம், சடையாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கன்னிவாடி பேரூராட்சி

கன்னிவாடி பேரூர் கழக அவைத்தலைவராக சர்புதீன், செயலாளராக இளங்கோவன், துணைச் செயலாளராக கலையரசன், வீரமோகன் (ஆதிதிராவிடர்) மகளிர் துணைச் செயலாளராக நல்லம்மாள், பொருளாளராக பிச்சைமுத்து, மாவட்ட பிரதிநிதிகளாக பெருமாள், ஜீவானந்தம், ஒன்றிய பிரதிநிதிகளாக காளிமுத்து, மயில்சாமி, சரவணன், பழனிச்சாமி, பாலமுருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீராமபுரம் பேரூராட்சி

ஸ்ரீராமபுரம் பேரூர் கழக அவைத்தலைவராக விஜயலட்சுமணன்,  செயலாளராக வண்ணவெங்கடசுப்பையா, துணைச் செயலாளராக பாலமுருகன், சாந்தகுமார் (ஆதிதிராவிடர்) மகளிர் துணைச் செயலாளராக சுகப்பிரியா, பொருளாளராக துரையன், மாவட்ட பிரதிநிதிகளாக சாகுல்அமீது, குப்புச்சாமி, ஒன்றிய பிரதிநிதிகளாக மாரியப்பன், வினோத்குமார், யுவராஜ், ஜெயராம், மகேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நகர நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: