×

ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூரில் தொமுச ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூலை 30: தொழிலாளர், ஜனநாயக விரோத போக்கை ஒன்றிய அரசு கடைபிடிப்பதாகவும், இதனை பேசிய எம்.பிக்கள் இடைநீக்கம் செய்ததை கடுமையாக கண்டிப்பதாகவும் கூறி திருப்பூரில் தொமுச பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் ரயில் நிலையம் முன்பு நேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொமுச பேரவை மாநில துணை செயலாளர் டிகேடி மு.நாகராசன் தலைமை  தாங்கி பேசினார். மாவட்ட தொமுச பேரவை செயலாளர் ஜீவா சிதம்பரசாமி, துணை தலைவர் ஆர்.ரெங்கசாமி, மின்வாரிய தொமுச ஈ.பி.அ.சரவணன், பொருளாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தொமுச நிர்வாகிகள் ஹோட்டல் மகேஷ், நித்தியானந்தம், கார்த்திகேயன், ஜின்னா பாய், விநாயக மூர்த்தி, ஐயப்பன், பழனிசாமி, சானை ராஜா, வேல்முருகன், சுப்ரமணியம், ஆறுமுகம், மயில்சாமி, வேல்முருகன், சுப்ரமணி, ரவி, மணி, ராஜேந்திரன், நடராஜ், சாகுல் அமீது, வெள்ளத்துரை, ராஜ்மோகன் மற்றும் தொமுச பேரவை இணைப்பு சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசின் விரோத போக்குகளை கண்டித்து கோஷமிட்டனர்.

Tags : Thomus ,Tirupur ,Union Government ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...