அம்மன் கோயிலில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

திருப்பூர், ஜூலை 30: ஊத்துக்குளி அருகே அம்மன் கோயிலில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருப்பூர்,  ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் அழகு நாச்சியம்மன் கோயில் உள்ளது.  இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம்  இரவு கோயிலில் பூஜைகளை முடித்து விட்டு வழக்கம்போல கோயிலை ஊழியர்கள் பூட்டி  சென்றனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் கோயிலின் முன்பக்க  கதவை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அதற்குள் கதவில் பொருத்தப்பட்டிருந்த  அலாரம் ஒலிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில்  ஊத்துக்குளி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: