பாஜகவின் வெறுப்பு அரசியலை கண்டித்து சிறுபான்மை நலக்குழு ஆர்ப்பாட்டம்

சிவகாசி, ஜூலை 29: பாஜவின் வெறுப்பு அரசியலை கண்டித்து, சிவகாசியில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜ ஆட்சியில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவதை கணடித்தும், நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது பாஜ வெறுப்பு அரசியலை ஏற்படுத்தி வருவதை கண்டித்தும், சிவகாசியில் சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகாசி பாவடித் தோப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மரியடேவிட், மாவட்ட பொருளாளர் முகமது இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் தாமஸ் பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி பெரிய பள்ளி வாசல் ஆலின் அஹமதுயாசின், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் இப்ராஹிம்ஷா, தேசிய லீக் மாநிலச் செயலாளர் செய்யது ஜஹாங்கீர், தமுமுக மாவட்ட செயலாளர் அஜ்மீர்கான், அப்துல் அஜிஸ் ஆகியோர் பேசினர். மாநில

பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.

Related Stories: