பெல் நிறுவனத்திற்கு அனுப்ப வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கேன் செய்யும் பணி துவக்கம் கலெக்டர் ஆய்வு

விருதுநகர், ஜூலை 29:  விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கை, அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், கலெக்டர் மேகநாதரெட்டி நேற்று பார்வையிட்டார். வாக்குப்பதிவு இயந்தி பாதுகாப்பு அறையில் 410 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் பழுது நீக்கும் பணிக்காவும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பழுதடைந்த 38 வாக்குப்பதிவு கட்டுப்பாடு இயந்திரங்கள், 36 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 68 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் என 552 வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணைய உத்தரவின்படி கர்நாடாக பெங்களுரூ பெல் நிறுவனத்திற்கு அனுப்ப தயார் நிலையில் வைக்க ஏதுவாக இஎம்எஸ் மென்பொருள் ஸ்கேன் செய்ய திறக்கப்பட்டது. நிகழ்வில், டிஆர்ஓ ரவிக்குமார், நேர்முக உதவியாளர் காளிமுத்து, வட்டாட்சியர் (தேர்தல்) மாரிச்செல்வி மற்றும் அரசியல் கட்சி பிரநிதிகள் பங்கேற்றனர்.

Related Stories: