×

பிராணிகள் வதை தடுப்புச் சங்க ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பங்கேற்பு

தேனி, ஜூலை 29: தேனி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்பு சங்க செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பிராணிகள் வதை தடுப்புச் சங்க செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.  கூட்டத்திற்கு கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி முன்னிலை வகித்தனர்.

கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சுப்பையாபாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் கலெக்டர் முரளீதரன் பேசும்போது, விலங்குகள் மனித நலவாழ்வில் முக்கிய அங்கமாக உள்ளதால் பிராணிகளை பாதுகாத்து துண்புறுத்துவதை தடுப்பதற்கு பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இச்சங்கத்தில் பிராணிகள் நலனில் ஆர்வமுள்ளவர்களை அதிக அளவில்  சேர்க்க வேண்டும். அதற்கான நுழைவுக் கட்டணமாக ரூ.100ம், ஆண்டுக்கட்டணமாக ரூ.200ம் வசூலித்து ரசீது வழங்கலாம், என கலெக்டர் பேசினார்.

Tags : Animal Cruelty Prevention Society ,
× RELATED துன்புறுத்தி பிச்சை எடுத்ததாக கூறி...