தேனி ஒன்றிய பேரூர் திமுக நிர்வாகிகள் அறிவிப்பு

தேனி, ஜூலை 29: தேனி ஒன்றியத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கான திமுக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.திமுக உட்கட்சித் தேர்தல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக நடந்தது. இத்தேர்தலில் பேரூராட்சி நிர்வாகிகள் தேர்வுக்கான பட்டியலை திமுக தலைமை அறிவித்துள்ளது. இதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சி நிர்வாகிகள் பட்டியலை நேற்று திமுக தலைமை அறிவித்துள்ளது. தேனி தெற்கு ஒன்றியத்தில் வீரபாண்டி பேரூராட்சி மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிகள் உள்ளன.

வீரபாண்டி பேரூராட்சி அவைத் தலைவராக சேகர், செயலாளராக செல்வராஜ், துணை செயலாளர்களாக செல்வம், முருகன், கல்பனாதேவி, பொருளாளராக ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதிகளாக ரத்தினம், ரெங்கத்துரை, ஒன்றிய பிரதிநிதிகளாக முருகன், ரத்தினமணி, சுந்தர்ராஜன், சிங்கத்துரை, தங்கப்பாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் அவைத் தலைவராக ஜோதிராம், செயலாளராக செல்வராஜ், துணை செயலாளர்களாக இளம்வழுதி, பாப்பா, போதுமணி, பொருளாளராக செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதிகளாக ராஜன் கணேஸ்பாபு, ஒன்றிய பிரதிநிதிகளாக வெங்கடேசன், போஸ், விஜயகுமார், பாபு, பரமசிவம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

போடி ஒன்றியத்திற்குட்பட்ட பூதிப்புரம் பேரூராட்சியில் அவைத் தலைவராக சிவனாண்டி, செயலாளராக கவியரசு, துணை செயலாளர்களாக பழனிமுத்து, முருகேசன், வாணி, பொருளாளராக பிரகாசம், மாவட்ட பிரதிநிதிகளாக பெத்தூரான், சக்கரயபபன் ஒன்றிய பிரதிநிதிகளாக ஆண்டி, குருசாமி, முனீஸ்வரன், திருமுருகன், சுப்புராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: