திமுக புதிய நிர்வாகிகள்

ராமநாதபுரம், ஜூலை 29:   மண்டபம் பேரூராட்சி திமுக 15வது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள், பிரதிநிதிகள் பெயர் பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இதன்படி, அவைத்தலைவராக முருகானந்தம், செயலாளராக அப்துல் ரஹ்மான், துணை செயலாளர்களாக செல்வராஜ், களஞ்சியம், வானதி, பொருளாளராக சீனி மீராஸா, மாவட்ட பிரதிநிதிகளாக ராஜகோபால், பதுருதீன், ஒன்றிய பிரதிநிதிகளாக காதர், சாதிக் பாட்ஷா, ஆதம் முஹமது, முகைதீன் அப்துல் காதர், வீரபாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.மங்கலம் பேரூர் திமுக அவைத் தலைவராக தென்றல் ஜலில், நகர் செயலாளராக கண்ணன், துணைச் செயலாளர்களாக ஷேக் அப்துல்லா,சங்கர், மெளசூரியா ஆகியோரும் பொருளாளராக ராமர், ஒன்றிய பிரதிநிதிகளாக மருது, ராசு, பிரபாகரன், செய்யது அப் தாஹிர் .காளிதாஸ், மாவட்ட பிரதிநிதிகளாக சரவணன், கந்தசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தொண்டி திமுக நிர்வாகிகள் பட்டியல்:அவைத் தலைவர் லியாக்கத் அலிகான். நகர் செயலாளர் இஸ்மத் இனூன், து.செயலாளர் தாஸ், ரவிக்குமார், சரோஜா, பொருளாளர் கலந்தர் மீரா முகைதீன். மாவட்ட பிரதிநிதி சீத்தாராம், ஜவஹர் அலிக்கான், ஒன்றிய பிரதிநிதி நாசர் முகமது, காளிதாஸ், செல்லத்துரை, அசோக்குமார், சேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: