திமுக நகர செயலாளர்கள் நியமனம்

அலஙகாநல்லூர், ஜூலை 29: அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சி  பகுதிகளுக்கு புதிய நகர செயலாளர்களை தேர்வு செய்து திமுக தலைமை கழகம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரை வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட சோழவந்தான்  தொகுதி அலங்காநல்லூர் நகர் திமுக செயலாளராக முன்னாள் பேரூராட்சி தலைவர்  ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் பாலமேடு திமுக நகர் செயலாளராக மனோகர  வேல் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் வணிகவரி- பதிவுத்துறை  அமைச்சர் பி. மூர்த்தி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோரை சந்தித்து  வாழ்த்து பெறவுள்ளனர்.

Related Stories: