பாலமேடு அருகே விவசாயி கழுத்தறுத்து கொலை

அலங்காநல்லூர், ஜூலை 29: பாலமேடு அருகே தோட்டத்தில் தங்கியிருந்த விவசாயி கழுத்தறுத்து ெகாலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பாலமேடு அருகே மறவபட்டி கிராமத்தை  சேர்ந்தவர் நல்லதம்பி (65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு  வழக்கம்போல் தனது தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகத்திற்கு சென்றுள்ளார்.  இரவு மழை பெய்ததால் வீட்டிற்கு வர முடியாமல் தனியாக தோட்டத்தில் தங்கி  இருந்துள்ளார். நல்லதம்பி காலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது  குடும்பத்தினர் தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அப்ேபாது நல்லதம்பி  கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  

தகவலறிந்து வந்த பாலமேடு இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார்  உடலை கைப்பற்றி மதுரை ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு  தடவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தோட்டத்தில் தங்கியிருந்த விவசாயி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: