×

சிறுமலை பழங்குடியினர் வசிப்பிடத்தில் சாலை அமைக்க அதிகாரி ஆய்வு

திண்டுக்கல், ஜூலை 29: சிறுமலையில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் சாலை அமைக்க, மலைவாழ் பகுதி வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார். திண்டுக்கல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சிறுமலை அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள வேலாம்பண்ணை, தாலக்கடை, பொன்னுருக்கி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 52 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின பலியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடமான்குளம் முதல் தாலக்கடை வழியாக வேலாம்பண்ணை வரை, தார்சாலையை மேம்படுத்துதல், பொன்னுருக்கி பிரிவு முதல் பள்ளிக்கூடம் வரை

உள்ள தார்ச்சாலையை மேம்படுத்துதல், சிறுமலை புதூர் முதல் தென்மலை செல்லும் சாலையில், கண்ணன் கோவில் முதல் பசிலிக்காடு வரை செல்லும் மண்சாலையை தார்ச்சாலையாக மேம்படுத்துதல், தென்மலை பொன்னுருக்கி பிரிவு முதல் கருப்பு கோவில் ஆர்.வி.சேகர் காடு வரை உள்ள மண்சாலையைதார்ச்சாலையாக மேம்படுத்துதல் தொடர்பாக சிறுமலை ஊராட்சி சார்பில் கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் சிறுமலையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2022-23 ஆண்டிற்கான புதிய முன்மொழிவு பணிகளை, மலைவாழ் பகுதி வளர்ச்சி திட்ட இயக்குனர் மோனிகா ராணா மற்றும் பொறியாளர் குமார் களஆய்வு செய்து விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊராட்சி செயலாளர் கிரி, பிடிஓ கிருஷ்ணன் (வ.ஊ), மலரவன் (கி.ஊ), சிறுமலை ஊராட்சி செயலாளர் முத்துக்குமார், வார்டு உறுப்பினர் வெள்ளிமலை
மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED போலி ஆவணம் மூலம் நிலம் அபகரிப்பு