×

கொடைக்கானலில் சாலையோரம் வீசப்பட்ட தபால்கள் அஞ்சல் அலுவலரிடம் ஒப்படைத்த போலீசார்

கொடைக்கானல், ஜூலை29: கொடைக்கானலில் சாலையோரம் வீசப்பட்ட தபால்களை, போலீசார் சேகரித்து அஞ்சல்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் 24 வார்டுகள் உள்ளன. பல்வேறு அரசு துறை மற்றும் வங்கிகளில் இருந்து வரும் தபால்கள் கொடைக்கானல் தபால் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் இங்கிருந்து தபால்காரர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில், கொடைக்கானல் செண்பகனூர் அருகே சாலையோரம், நகருக்கு வந்த 300க்கும் மேற்பட்ட தபால்கள் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவைகளில் ஆதார் அட்டை, வங்கியிலிருந்து அனுப்பிய தபால்கள் உள்ளிட்ட பல முக்கிய தபால்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல் துறை ஆய்வாளர் பாஸ்டின் தினகரன், தபால்களை சேகரித்து, தபால் துறை அலுவலரிடம் ஒப்படைத்தார். இது குறித்து தபால் நிலையத்தில் இருக்கக்கூடிய அலுவலரிடம் கேட்டபோது முறையான பதில் தெரிவிக்கவில்லை.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்