×

கோபி அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

கோபி, ஜூலை 29 : கோபி அருகே உள்ள அளுக்குளி காசியூரில் மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் உயிரிழந்தது. கோபி அருகே உள்ள அளுக்குளி காசியூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி(55).விவசாயியான வெள்ளியங்கிரி நேற்று காலை ஆடுகளை அவரது விவசாய நிலத்தில் கட்டி வைத்து விட்டு அளுக்குளியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு பால் கொண்டு  சென்று விட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு ஆடுகள் கட்டப்பட்ட இடத்திற்கு வந்த போது ஒரு ஆடு கிணற்றில் விழுந்து கிடப்பது கண்டு அதை மீட்டு சென்றபோது 3 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றிருப்பது தெரியவந்தது.

ஒரு ஆடு படுகாயங்களுடன் உயிருக்கு போராடியது. மர்ம விலங்கை கண்ட ஆடு கிணற்றில் விழுந்திருப்பது தெரியவந்தது.தகவல் அறிந்ததும் கடத்தூர் போலீசார், டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை நடத்தினர்.சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிலேயே புலிகள் சரணாலயம் உள்ளது. ஏற்கனவே நம்பியூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் சிறுத்தை கடித்து ஆடுகள் பலியான நிலையில் தற்போது அளுக்குளி காசியூரில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியாகி இருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியடைந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆடுகள் பலியான இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் குடியிருப்புகளும் உள்ள நிலையில் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kobe ,
× RELATED கோபி, சுதாகரின் அடுத்த அதிரடி; “கோடியில் இருவர்” வெப் சீரிஸ்