×

திருவாரூர் விளையாட்டு மைதானத்தில் சதுரங்க அட்டையாக மாறிய பார்வையாளர் இருக்கைகள் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு

திருவாரூர், ஜூலை 29: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலக ஸ்டேடியத்தில் பெயிண்ட் மூலம் சதுரங்க அட்டை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னையிலுள்ள நேரு உள்விளையாடரங்கத்தில் நேற்று துவங்கியது. இதனை ஆளுநர் என்.ஆர்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே எதிர்பார்க்கும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக நடைபெறும் இந்த போட்டியினையொட்டி தமிழக அரசு சார்பில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மாநில முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன்ஒரு பகுதியாக சென்னை நேப்பியர் பாலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் இருந்து வரும் பாலங்களில் செஸ் கட்டத்தை போன்று கருப்பு, வெள்ளை பெயிண்டு கொண்டு அலங்கரிக்கப்பட்டன. மேலும், திருவாரூர் மாவட்டத்தில சைக்கிள் பேரணி, வாகன பேரணி, கோல போட்டி,மினி மாரத்தான் ஓட்டம், பள்ளி மாணவர்களுக்கிடையே போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த செஸ் போட்டியினையொட்டி ஜோதி சுடர் ஓட்டமும் நடைபெற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றுகளை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன், எம்.பி செல்வராஜ் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் வழங்கினர். இந்நிலையில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகுவேந்தன் ஏற்ப்பாட்டின் பேரில் மாவட்ட விளையாட்டு அலுவலக ஸ்டேடியத்தில் பெயிண்ட் மூலம் செஸ் வடிவம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதனை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர்.

Tags : Chess Olympiad ,Tiruvarur sports ,
× RELATED செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி,...