×

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையால் குறுவை, பருத்தி பயிர் பாதிப்பு

திருவாரூர், ஜூலை 29: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை காரணமாக முன்பட்ட குறுவை பயிர் மற்றும் பருத்தி பயிர் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் என்பது கடந்த 5 மாத காலமாக சுட்டெரித்து வருகிறது. இதனையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 90 டிகிரி முதல் 100 டிகிரி வரையில் வெயில் அடித்து வருகிறது. இதேபோன்று திருவாரூர் மாவட்டத்திலும் தினந்தோறும் 90 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்து வந்தாலும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பணிக்கு செல்வோர் மற்றும் தொழிலாளர்கள் போன்றவர்கள் இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக மாலை நேரத்தில் மேகமூட்டம் ஏற்ப்பட்டு மிதமான மழை பெய்ததன் காரணமாக பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் கடந்த 26ம் தேதி நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 450.6 மி.மீ மழை பதிவாகியது. இந்நிலையில் நேற்றும் மாவட்டத்தில் திருவாரூர் உட்பட பல்வேறு இடங்களில் மதியம் 2 மணியளவிலேயே மழை துவங்கிய நிலையில் சுமார் ஒண்டரை மணி நேரம் வரையில் மிதமான மழையாக பெய்தது. இதன் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதுடன் தற்போது கதிர்வந்த நிலையில் இருந்து வரும் முன்பட்ட குறுவை பயிர்கள் மற்றும் அறுவடை நடைபெற்று வரும் பருத்தி பயிர்களுக்கு இந்த மழையானது பாதிப்பை ஏற்ப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலையில் இருந்து வருகின்றனர்.

Tags : Tiruvarur district ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி