×

குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் தகவல் திருவாரூர் மாவட்டத்தில் ரசாயனம் கலந்த மீன் விற்பனையை தடுக்க வேண்டும்


திருவாரூர், ஜூலை 29: திருவாரூர் மாவட்டம் நாட்டு மீன் வளர்ப்பு சங்கத்தின் சார்பில் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, மாவட்டம் முழுவதும் கிராம ஊராட்சிக்கு சொந்தமான குளங்கள் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பண்ணை குட்டைகள் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அமைக்கப்பட்ட பண்ணை குட்டைகள் ஆகியவற்றில் மீன் வளர்ப்பு தொழில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பயன்பட்டு வருகின்றனர். இந்நிலையில்ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ரசாயனம் முறையில் வளர்க்கப்பட்ட மீன்கள் பிளாஸ்டிக் டிரம்களில் அடைத்து கொண்டு வரப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக இந்த மீன்களை உண்பவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி உள்நாட்டு மீன் வளர்ப்பவர்கள் மற்றும் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்ட மீன்கள் திருவாரூர் மாவட்டத்தில் விற்பனை செய்வதை தடுத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kuradithir ,Tiruvarur ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...