×

முப்போகம் சாகுபடியால் விவசாயிகள் மகிழ்ச்சி தஞ்சாவூரில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பிஆர்ஓ பழைய அலுவலகம்

தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூரில் உள்ள பிஆர்ஓ பழைய அலுவலக கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூரில் ஆற்றுப்பாலம் அருகே பழைய கோர்ட் ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பழைய கட்டிடம் பழுதடைந்து பூட்டி கிடக்கிறது. இந்த கட்டிடத்தில் தான் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் நீண்டகாலமாக இயங்கியது. தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் தஞ்சாவூர்- வல்லம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு செயல்படுகிறது. அதனால் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே செய்தி மக்கள் தொடர்பு அலுவலகமும் செயல்படுகிறது.இந்த நிலையில் செய்தி மக்கள் தொடர்பு துறை பழைய அலுவலக கட்டிடம் அப்படியே கேட்பாரற்று பாழடைந்து கிடக்கிறது. அந்த அலுவலகத்தின் அருகிலேயே அதிமுக ஆட்சி காலத்தில் ஆவின் பாலகம் செயல்பட்டு வருகிறது. அதனால் டீ, பால் குடிக்க வரும் மக்கள் பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட பொருட்களை அங்கேயே விட்டு செல்கின்றனர். அதோடு டீ குடிக்க வருவது போன்று வந்து, பிஆர்ஓ பழைய கட்டிடத்தில் மது அருந்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதோடு சிலர் தகாத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கவனிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Muppogam ,Old PRO ,Thanjavur ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...