தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலைஅறிவியல் கல்லூரியில் பயிற்சியாளர்கள் பயிற்சி திட்டம்

பெரம்பலூர், ஜூலை 29: பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியில் ‘‘பயிற்சியாளர்கள் பயிற்சி திட்டம்” தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் அனைத்து கல்லூரி பேராசிரியர்களுக்கும் நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் உமாதேவி பொங்கியா வரவேற்புரை ஆற்றினார். சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் வெற்றிவேலன் வாழ்த்துரை வழங்கினார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியின் முன்னாள் முதல்வர் மற்றும் நுண்ணுயிரியல் துறையின் இணை பேராசிரியர் முனைவர் இரா.ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆராய்ச்சி முன்மொழிவை உருவாக்குதல் மற்றும் அரசு, அரசு சார்பற்ற நிறுவனங்களிலிருந்து ஆராய்ச்சிக்கான நிதி திரட்டும் முறை குறித்தும் சிறப்புரையாற்றினார். கேரள மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி, புற்றுநோய் மையப்பிரிவின் இணை பேராசிரியர் டாக்டர் குருவாயூரப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிதி திட்டங்கள் குறித்து பேராசிரியர்களுக்கு எடுத்துரைத்தார். ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் யோகவினோதா நன்றி கூறினார்.

Related Stories: