×

அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூலை 29: அரியலூரில் அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணாசிலை அருகே மத்திய பாஜக அரசு அத்தியாவசிய பொருட்கள் மீது விதித்துள்ள ஜிஎஸ்டி வரியை உடனே திரும்ப பெற கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் அருணன் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பத்மாவதி, மலர்கொடி, பாக்கியம், கந்தன், அருண்பாண்டியன், பி.துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 % ஒன்றிய பாஜக அரசு விதித்து அமலுக்கு வந்துள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலகுழு உறுப்பினர் வாலண்டினா, மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிவேல், அம்பிகா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் சிஐடியூ நிர்வாகி சந்தானம் நன்றி கூறினார்.

Tags : Communist ,
× RELATED மதவாத சக்திகளை முறியடித்து ஜனநாயக...