மாநில கராத்தே போட்டி திருவில்லி மாணவர்கள் சாம்பியன்

திருவில்லிபுத்தூர், ஜூலை 28: மதுரை திருப்பரங்குன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 450 பேர் பங்கேற்றனர். இதில் திருவில்லிபுத்தூர் சோட்டோகான் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் தலைமை பயிற்சியாளர் சென்சாய்  செபஸ்தியான் மற்றும் வினோத் செபஸ்டியான் தலைமையில் லைன்ஸ் பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளி மற்றும் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 34 மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் 34 பேரும் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சியாளர் சென்சாய்  செபஸ்டியான் மற்றும் வினோத் செபாஸ்டியன் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Related Stories: