தமிழக பஸ்சிற்கு அனுமதி மறுத்த கேரள வனத்துறையினரை கண்டித்து போராட்டம்

கம்பம், ஜூலை 28: மதுரையிலிருந்து தேக்கடி சென்ற தமிழ்நாடு அரசு பஸ்சை கேரள வனத்துறையினர் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதை கண்டித்து, நேற்று விவசாயிகள் சங்கம் சார்பில் குமுளி தமிழக எல்லையில் சென்று போராட்டம் முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். மதுரையில் இருந்து நேற்று முன்தினம் தேக்கடி சென்ற தமிழக அரசு பஸ்சை தேக்கடி சோதனை சாவடியில் கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

 பஸ் ஊழியர்கள் பெர்மிட் இருப்பதாக எடுத்துக்கூறினாலும் வனத்துறையினர் பஸ்சை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதை கண்டித்து கூடலூர் விவசாய சங்கத்தினர், கம்பத்தில் இருந்து தேக்கடி பஸ்சில் தமிழக எல்லையில் சென்று போராட்டம் நடத்த முயன்றனர். இதனை தொடர்ந்து கம்பத்திலிருந்து பஸ்சில் குமுளி சென்று போராட்டம் நடத்த முயன்ற 4 பேரை போலீசார் பிடித்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

 மேலும் கூடலூரில் இருந்து குமுளி சென்று போராட்டம் நடத்த பஸ்சில் சென்ற 3 பேரையும் போலீசார் பிடித்து காவல்நிலையத்தில் வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: