அகமலை மக்கள் குறைதீர் முகாமில் 23 மனுக்களுக்கு உடனடி தீர்வு

போடி, ஜூலை 28: போடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகமலை கிராம மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை போடி தாசில்தார் அலுவலகத்தில் வழங்கியிருந்தனர்.

 அதன்படி நேற்று உத்தமபாளையம் டிஆர்ஓ கௌசல்யா தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு முகம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களிடம் இருந்து 23 மனுக்கள் நேரடியாக ஆர்டிஓவிடம் வழங்கப்பட்டது. அதில் நில பட்டா மாறுதல், ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, பிறப்பு சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை போடி தாசில்தார் செந்தில் முருகன் செய்திருந்தார். இம்முகாமில், கிராம நிர்வாக அதிகாரிகள், அகமலை ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: