மின்சார பெருவிழா

சிங்கம்புணரி, ஜூலை 28: ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம் என்னும் மின்சாரப் பெருவிழா ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த பங்கேற்புடன் ஜூலை மாதம் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிங்கம்புணரியில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முன்னிலை வகித்தார். அமைச்சர் பேசும்போது, மின்சாரம் என்பது மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து விட்டது.

தொழில்துறை, விவசாயம், வீடுகளில் மின்சாரம் இல்லாமல் எதுவும் நடக்காத நிலை உள்ளது. தமிழக முதல்வரின் சிறப்பான திட்டமாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்புகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளியூட்டியுள்ளார் என்றார். தொடர்ந்து பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஊரக மின்மயமாக்கல் நிறுவனத்தின் பொது மேலாளர் உதயகுமார் வரவேற்றார். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் செல்லத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: