×

பாலம் அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் தகவல்

திருப்புவனம், ஜூலை 28: திருப்புவனம் அருகே லாடனேந்தல்-கே.பெத்தானேந்தல் இடையே வைகை ஆறு செல்கிறது. ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ரூ.18.70 கோடி மதிப்பீட்டில் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 374 மீ நீளம் 9.95 மீ அகலம் 19 தூண்கள் 18 கண்களுடம் உயர்மட்டப் பாலம் கட்டப்படவுள்ளது. இதன் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கிவைத்தார். மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஒன்றியக்குழு தலைவர் தூதை சின்னையா, துணைத்தலைவர் மூர்த்தி, மாவட்ட ஊராட்சி துணைத்தலவர், சரஸ்வதி ஆகியோர் பங்கேற்றனர். கே.பெத்தானேந்தல் ஊராட்சி சார்பில் தலைவர் ராமேஸ்வரி முனியாண்டி வரவேற்றார். நபார்டு மற்றும் கிராமசலைகள் கோட்டப் பொறியாளர் முரளீதர், உதவி கோட்டப்பொறியாளர் சென்றாயன், உதவி பொறியாளர் ஜெகநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் பாக்யலட்சுமி, மானாமதுரை முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடி, காஞ்சிரங்கால் உராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து லாடனேந்தல் கவுன்சிலர் சுப்பையா,மணல்மேடு ராஜா, ஊராட்சி செயலாளர் ராஜா,அச்சங்குளம் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து லாடனேந்தலில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசியதாவது, அண்ணா ,கலைஞர் வழியில் முதல்வர் பல்வேறு மக்கள் நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களின் போக்குவரத்துக்கு சாலை வசதி, பாலங்கள் போன்ற இன்றியமையாத பணிகளை கவனத்துடன் நிறைவேற்றி வருகிறார். பெத்தானேந்தல், மணல் மேடு, லாடநேந்தல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வைகை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை முதல்வர் சீரிய நோக்கத்தில் இன்று நிறைவேற்றியிருக்கிறார்.இதனால் லாடனேந்தல்,பெத்தானேந்தல் கணக்கன்குடி, ஏனாதி, சடங்கி,கருங்குளம், பாப்பாகுடி, திருமாஞ்சோலை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள்.

 திமுக ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் சிவகங்கை மாவட்டதில் மட்டும் நெடுஞ்சாலை துறையின் சார்பில் ரூ.700 கோடி மதிப்பிலான திட்டபணிகள் நடந்து வருகிறது. திருப்புவனம் பேரூராட்சி மக்களின் கோரிக்கையாக அங்கு நிரந்தர பஸ் நிலையம் விரைவில் அமைப்போம் என்றார். தொடர்ந்து பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் கால்நடை பராமரிப்புக்கு வட்டியில்லா கடனாக ரூ.8 லட்சத்து 54ஆயிரத்தை 16 உறுப்பினர்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

Tags : Minister ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...