ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்ட பணி வேளாண் அதிகாரிகள் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 28: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை இணை இயக்குநர் தலைமையில் நேரில் கள ஆய்வு நடைபெற்றது. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் சோழந்தூர், ஊரணங்குடி,அழகர் தேவன்கோட்டை, ஏ.ஆர்.மங்கலம், ஓடைக்கால்,மேல்பனையூர், ஆனந்தூர்,செங்குடி மற்றும் கொத்திடல் களக்குடி உள்ளிட்ட கிராம பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கிராமங்களில் உள்ள தரிசு நில தொகுப்புகளை தேர்வு செய்து அவற்றை பயிர் சாகுபடிக்கு கொண்டு வருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதன்படி ஓடைக்கால் கிராமத்தில் உள்ள தரிசு நில தொகுப்புகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொ)கண்ணையா நேரில் ஆய்வு செய்து ஆய்வு செய்து களப்பணியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். செங்குடி கிராமத்திலுள்ள தரிசு நில தொகுப்பை வேளாண்மை துணை இயக்குனர் சேக் அப்துல்லா ஆய்வு செய்தார். தரிசு நில தொகுப்பிலுள்ள கருவேல மரங்கள் மற்றும் முள் செடிகளை அகற்றி சாகுபடிக்கு உகந்த நிலமாக மாற்ற வேண்டும் என விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார். மேலும் நில நீர் ஆய்வு அடிப்படையில் நீர் ஆதாரம் குழாய்க் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு போன்ற பாசன நீராதாரத்தினை உருவாக்கித் தரப்படும் எனக் கூறினார்.

கள்ளிக்குடியில் 2021-22ம் ஆண்டு கூட்டு பண்ணையத் திட்டத்தில் வாங்கப்பட்ட வேளாண் கருவிகள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்(அரிசி) திட்டத்தின்கீழ் மானியத்தில் வழங்கப்பட்ட ஆயில் என்ஜினை வேளாண்மை இணை இயக்குனர் (பொ)கண்ணையா ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, வேளாண்மை அலுவலர் செல்வி கலை பிரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் தீபா,ரிஷி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: