மதுரையில் மாநில ஹாக்கி போட்டி கால் இறுதி போட்டிக்கு 4 அணிகள் தகுதி ஒரு கோல் போட்ட ஒலிம்பிக் வீரர்

மதுரை, ஜூலை 28: மதுரை ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் ஸ்டேடியத்தில் உள்ள மைதானத்தில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் திண்டுக்கல் பாண்டியாஸ் கிளப் அணி, மதுரை ஜிகே மோட்டார்ஸ் அணியை 2க்கு 1 கோல் அடிப்படையில் வென்றது. சென்னை ஐஓபி அணி8க்கு 2 கோல் அடிப்படையில் வாடிப்பட்டி எவர்கிரேட்கிளப் அணியை வென்றது. ஐஓபி அணிக்காக விளையாடிய ஒலிம்பிக் வீரரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ருபிந்தர் பால்சிங் ஒரு கோல் போட்டார். சென்னை வருமானவரித்துறை அணி 5க்கு 1 என்ற கோல் கணக்கில் சென்னை பெருநகர போலீஸ் அணியை வென்றது. சென்னை ஜிஎஸ்டி- சென்ட்ரல் எக்ஸ்சைஸ் அணி 6க்கு 2 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி தாமஸ்நகர் ஹாக்கி கிளப் அணியை வென்றது. இதில் வென்ற 4 அணிகளும் கால் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றது.

Related Stories: