தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜூலை 28: ஒன்றிய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் பொன் ஆண்டவர் வரவேற்றார். மாநகர மாவட்ட தலைவர் மாதவன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜவகர், மேற்கு மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் பொன் இளங்கோ பேசுகையில், ஒன்றிய அரசு உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்றார்.மாநில தொண்டரணி துணைச் செயலாளர் முருகன், மாநில நெசவாளர் அணி செயலாளர் சுகுமார், திண்டுக்கல் மாநகர கிழக்கு ஒன்றிய செயலாளர் குழந்தை, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் ஸ்டீபன் ராஜ், அஜ்மல் உசேன், சிவ பிரபு, பன்னீர்செல்வம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: